மாணவர்கள் எளிமையாக கற்க கையேடு சப்ளை
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பாடங்களை எளிதான முறையில் தயார்செய்து, வினா - விடை தொகுப்பு முறையில், 'எளிய கற்றல் கையேடு' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு 'எளிய கற்றல் கையேடு' நேற்று வழங்கப்பட்டது. இதன் மூலம், வரும் பொது தேர்வில் அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி விகிதம் இருக்கும் என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.