உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; வேன் ஓனர்கள் வரவேற்பு

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; வேன் ஓனர்கள் வரவேற்பு

சென்னை : தமிழ்நாடு வேன் உரிமை யாளர்கள் சங்க தலைவர் கமலகண்ணன், நேற்று வெளியிட்ட அறிக்கை:உச்ச நீதிமன்றம் கடந்த 6ம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி 7,500 கிலோ எடை உடைய வாகனங்களுக்கு, இலகு ரக ஓட்டுனர் உரிமம் பொருந்தும்.எனவே, அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், விபத்துக்கான இழப்பீடு தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த மகத்தான தீர்ப்பை, தமிழ்நாடு வேன் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இந்த தீர்ப்பை ஏற்று, இந்தியாவில் உள்ள அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகைகளை, உடனே வாகன உரிமையாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி