உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரதட்சணை வழக்கு தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

வரதட்சணை வழக்கு தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

சென்னை :வரதட்சணை வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுசர் பாத்திமா, 35. இவரது கணவர் யூசுப், 50. கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்தியதாக, கடந்த 2011ம் ஆண்டு செம்பியம் மகளிர் காவல் நிலையத்தில் கவுசர் பாத்திமா புகார் அளித்தார். புகாரை அடுத்து, போலீசார் வரதட்சணை தடைச்சட்டம், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், கடந்த 2015 அக்., 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், யூசுப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, யூசுப் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், 2019ம் ஆண்டு உயர் நீதிமன்றமும், கடந்த 8ம் தேதி உச்சநீதிமன்றமும், யூசுப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து நீதிமன்ற ஜாமினில் இருந்த யூசுப், நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை