10 மயானங்களுக்கு ரூ.3.71 கோடியில் சுற்றுச்சுவர்
சோழிங்கநல்லுார்;சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள பத்து மயானங்களில் சுற்றுச்சுவர் கட்ட, 3.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 195, 196, 198, 199 மற்றும் 200வது வார்டுகளில், 10 மயானங்கள் உள்ளன. பல மயானங்களில், சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு வேளையில் சமூக விரோதிகள் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் மது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு, மயானங்களை பயன்படுத்துகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு முயற்சியும் நடந்தது. இதனால், அனைத்து மயானங்களிலும், சுற்றுச்சுவர் கட்டி, நடைபாதை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக, 3.71 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.