நீச்சல் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை, கோடை காலத்தை முன்னிட்டு, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில், நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 1ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்தது.இதன் நான்காவது சிறப்பு முகாம், வரும் 13ல் துவங்குகிறது. இதற்கான முன்பதிவை எஸ்.டி.ஏ.டி., நீச்சல் அகாடமி துவக்கி உள்ளது.இதில் 120 செ.மீட்டருக்கு மேல் உயரம் உள்ள, ஏழு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று, நீச்சல் பயிற்சி பெறலாம்.இதற்கு கட்டணமாக 12 நாட்களுக்கு 2,360 ரூபாய் வசூலிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. விருப்பம் உள்ள மாணவர்கள், வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் அகாடமியை தொடர்பு கொள்ளலாம்.