உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு

தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு

சென்னை: கே.கே.நகரில் ராஜமன்னார் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, காமராஜர் சாலை, பி.டி., ராஜன் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதே போல, பசுல்லா சாலை, ராமேஸ்வரம் சாலை, நாயர் சாலை, ஜி.என்.,செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தி.நகர் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணியர் அவதிப்பட்டனர். மேற்கு மாம்பலத்தில் கோதண்டராமர் கோவில் தெரு, கோவிந்தன் சாலை, லட்சுமி தெரு, ஸ்டேஷன் சாலை, திருவேங்கடம் தெரு, பக்தவத்சலம் தெரு, எல்லையம்மன் தெரு, புஷ்பாவதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி சில வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதையடுத்து, மேற்கு மாம்பலம் லட்சுமி தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கோயம்பேடு சந்தையிலும், தொடர் மழையால் நீர் சூழ்ந்து, வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். கோயம்பேடு, சீனிவாசா நகர், மங்கம்மா நகர், சாஸ்த்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. கோடம்பாக்கத்தில், ரங்கராஜபுரம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் நிரம்பியதால் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டது.அதேபோல், விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலை, வடபழனி துரைசாமி சாலை, ஆண்டவர் கோவில் தெரு, அசோக் நகர் 100 அடி சாலை, அசோக் நகர் 18 வது அவென்யூ, நெசப்பாக்கம் ராமாபுரம் பிரதான சாலை, வளசரவாக்கம் மண்டலத்தில் சின்ன போரூர் அண்ணா சாலை, எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mettai* Tamil
அக் 16, 2024 10:51

ஒரு 40 வருசமா ரெண்டு திராவிட கட்சிகளும் , மழை நீர் வடிகால் மற்றும் கூவம் ஆற்று சுத்தம் செய்வது என்று எப்படியும் 10000 கோடிக்கு மேல்தான் கணக்கு காட்டியிருப்பாங்க ...இது அந்த ஊழல் அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியும் .......ஆனா ஊழல் வாக்காளர்களுக்கு தெரியாது.... .


Chidambarakrishnan K
அக் 16, 2024 10:25

பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் மழை நீர் வடிகால்கள் என்னவாயிற்று? இது நம் வரி பணம் அல்லவோ?


vbs manian
அக் 16, 2024 09:45

ஆயிரம் கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட கால்வாய்கள் என்னவாச்சு.


பேசும் தமிழன்
அக் 16, 2024 07:53

தமிழக விலைபோன ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் .....துளி தண்ணீர் இல்லை என்று....சென்னையின் பழைய புகைப்படத்தை காட்டி .....அரசின் அவலத்தை மறைக்க முட்டு கொடுப்பார்கள் பாருங்கள் !!! கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுறான்டா என்று தான் கூற தோன்றும்.


பேசும் தமிழன்
அக் 16, 2024 07:49

விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்..... விடியும் என்று ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்..... அவர்கள் தான் பொய் சொல்கிறார்கள் என்றால் மக்களுக்கு எங்கே போச்சு ???


Duruvesan
அக் 16, 2024 06:44

ஆக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருந்தால் எல்லாம் செய்து இருக்கலாம். இனியும் மக்களின் உயிருடன் விளையாடுவதை ஒன்றிய அரசு கைவிட்டு நிதி ஒதுக்க வேண்டும் என விடியல் அறிக்கை


raja
அக் 16, 2024 04:34

4000 கோடி .. திருட்டு டா... திராவிடம் டா .. புறங்கை நக்குடா... விடியல் டா. மாடல் டா... எல சின்னவன் நே எட்ரா வண்டிய... ஓட்ரா ஒன்கொள் கிவால் புறத்துக்கு...


vadivelu
அக் 16, 2024 07:09

எப்பதும் ஆளும் அரசை இனி யாரும் குறை கூறாதீர்கள், மழை காலம் என்றால் இப்படித்தான் ஐம்பது ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் முட்டு கொடுக்கும் அறிவாளிகளை முடிந்தவரை ஏறி மிதியுங்கள். அரசோ, அரசு அதிகாரிகளோ இயற்கையின் சீற்றத்தை கட்டு படுத்த முடியாது . கஷ்ட படுவோர் புலம்பும் நிலை கூட இயற்கைதான், ஆனால் பாவம் உணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று விடாமல் அவர்களை பழிக்கும் முட்டு கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கும் இழிவான பிறவிகளை ஒருபோதும் மன்னிக்க கூடாது.


raja
அக் 16, 2024 08:38

இதோ வந்துடான்ல ருவா 200 குடும்ப கொத்தடிமை இதே 2015 ல எடப்பாடியர் ஆட்சியில் என்னல்லாம் சொள்ளிப்படியெல்லாம் கூவி ஒப்பாரி வச்சிங்க.. இப்போ மற்றும் இயற்கையா.. ஆளும் கட்சி குறை சொல்ல கூடாதா .. கொதடிமையே


Mettai* Tamil
அக் 16, 2024 11:17

ஆமா வடிவேலு, 60 வருசமா கறை படியாத ஆளும் அரசை குறை சொல்லக்கூடாது. கறை பிடிக்காததால் கரையை ஏரி, குள கரையை அகற்றி பிளாட் போட்டு பொருளாதாரத்தை உயர்த்தியதை ஊழல் என்று ஆளும் அரசை குறை சொல்லக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை