இ.சி.ஆரில் தாஜ் ஹோட்டல்
சென்னை: ஐ.எச்.சி.எல்., எனப்படும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனம், எம்.ஜி.எம்., ெஹல்த் கேர் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், 13 ஏக்கரில், 'தாஜ் இ.சி.ஆர்' என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டலை அமைக்க உள்ளது. இதுகுறித்து, ஐ.எச்.சி.எல்., நிறுவன ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டு பிரிவின் நிர்வாக துணை தலைவர் சுமா வெங்கடேஷ் கூறியதாவது: இ.சி.ஆரில் அமைக்கப்படும் தாஜ் ஹோட்டல், 151 தங்கும் அறைகள், கூட்ட அரங்குகள், உணவகம் உட்பட பல வசதிகளை கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த திட்டத்திற்காக எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.