உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்

தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்

சென்னை, கேரளா மாநிலம், கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில், வரும் 1ம் தேதி முதல் நேரம் மாற்றப்படுகிறது. தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில், அதிகாலை 2:30 மணிக்கு தாம்பரம் வருவதால், இருப்பிடம் செல்ல சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த ரயிலில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, தாம்பரம் வந்தடையும் நேரத்தை மாற்றியமைத்து வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. அதன்படி, கொல்லத்தில் இருந்து பகல் 12:00 மணிக்கு பதிலாக இனி மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:06க்கு குண்டரா, 4:15க்கு கொட்டாரக்கரா, 4:28 மணிக்கு ஆவநீஸ்வரம், 4:55க்கு புனலுார், 5:43க்கு தென்மலை, 6:13க்கு ஆரியங்காவு, இரவு 7:10 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இரவு 7:28க்கு தென்காசி, 7:43க்கு கடையநல்லுார், 8:08க்கு சங்கரன்கோவில், 8:33க்கு ராஜபாளையம், 8:48க்கு ஸ்ரீ வில்லிப்புத்துார், 9:03க்கு சிவகாசி, 9:43க்கு விருதுநகர், 10:25க்கு மதுரை, 11:25க்கு திண்டுக்கல், மறுநாள் அதிகாலை 1:45க்கு திருச்சி, 3:33க்கு விருத்தாச்சலம், 3:49க்கு உளுந்துார்பேட்டை, 4:40க்கு விழுப்புரம், காலை 6:28க்கு செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு காலை 7:30 மணிக்கு வரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஓணம் சிறப்பு ரயில் ஓணம் பண்டிகையொட்டி, சென்ட்ரலில் இருந்து கேரளா மாநிலம் கண்ணுாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ★ சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 2:00 மணிக்கு கண்ணுாருக்கு செல்லும் ★ கண்ணுாரில் இருந்து வரும் 29ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும். எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து வரும் 30ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:15 மணிக்கு கண்ணுாருக்கு செல்லும், இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், வழியாக இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களின் இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை