உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

தாம்பரம், அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாக மக்களை சென்றடையவும் மற்றும் மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வுகாணும் வகையிலும், மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தாம்பரம் மாநகராட்சியில், 2மற்றும் 4 வது மண்டலங்களில், டிச., 27ம் தேதி , காலை 10: 30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை முகாம் நடக்கிறது.மண்டலம் 4ல் அடங்கிய, 32, 33, 49, 50- 61 ஆகிய வார்டுகளுக்கு, மேற்கு தாம்பரம், அம்பேத்கர் திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. மண்டலம் 2ல் அடங்கிய, 9, 13 - 21, 24, 26 - 28 ஆகிய வார்டுகளுக்கு, இரண்டாவது மண்டல அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. இதில், நகராட்சி நிர்வாகம், மின் வாரியம், வருவாய், மாற்றுத் திறனாளிகள் நலன், காவல், தொழிலாளர் நலன், வீட்டு வசதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமம், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், தாட்கோ ஆகிய துறைகள் பங்கேற்கின்றன. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்றுபயனடையலாம். முகாம்களில் பங்கேற்கும் மக்களின் கோரிக்கைகள் கணினியில் பதிவு செய்யப்படவுள்ளதால், அதற்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி