70 வார்டுகளிலும் துாய்மை பணி தாம்பரம் மாநகராட்சி திட்டம்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 5 மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டது. இம்மாநகராட்சியில், பாதாள சாக்கடை கசிவு, குப்பை, தெரு நாய், கழிவுநீர் கால்வாய் பிரச்னைகள் தொடர்பாக, நாள்தோறும் புகார்கள் வந்தபடி உள்ளன.புகார்களை நேரில் ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால், 70 வார்டுகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முகாம் நடத்த திட்டமிட்டு, முதற் கட்டமாக நேற்று, 5 மண்டலங்களிலும், 10 வார்டுகளில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.பாதாள சாக்கடை கசிவு சரிசெய்தல், கால்வாய்களை துார் வாருதல், கொசு மருந்து அடித்தல், காலி மனைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தியை தடுக்க, ஆயில் பந்து வீசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அடுத்த 10 நாட்களில், 70 வார்டுகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முகாம் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.