உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழ் எழுத்துரு போட்டி: 156 பேருக்கு பரிசு

தமிழ் எழுத்துரு போட்டி: 156 பேருக்கு பரிசு

ராமாபுரம், படைப்பாளிகளிடையே படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் கலை அனுபவத்தை வளர்க்கும் நோக்குடன், 'மெட்ராஸ்டர்ஸ்' என்ற அமைப்பு, 14 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்த அமைப்பு சார்பில், தமிழ் எழுத்துரு மற்றும் பண்பாட்டின் அழகை கொண்டாடும் விதமாக, 'கலையுகம்' திருவிழா நடந்தது.இவ்விழாவின் கருப்பொருளாக 'பருவ காலங்கள்' என்ற தலைப்பில், கடந்த மாதம் 16 முதல் 23ம் தேதி வரை ஏழு நாட்கள், தமிழ் எழுத்துரு போட்டிகள் நடத்தப்பட்டன. விதவிதமான, வித்தியாசமான தமிழ் எழுத்துருவை வரைந்து அசத்தினர்.இதன் நிறைவு விழா, ராமாபுரத்தில் நேற்று நடந்தது. இதில், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற தலைப்பில், குழு விவாதம் நடந்தது.தொடர்ந்து, தமிழ் எழுத்துரு போட்டியில் பங்கேற்ற 156 பேருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கவிஞர் மின்னல் பிரியன் பேசியதாவது:பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் இந்த காலத்தில், தமிழை துாக்கி நிறுத்த உழைக்கும், இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்நிகழ்வில், திரும்பும் திசையெல்லாம் இளைஞர்கள் வேட்டியுடன் காணப்பட்டனர். இது வேட்டிகள் தினமா என தோன்றியது. என் 19ம் வயதில் இருந்து 'தினமலர்' நாளிதழ் படித்து வருகிறேன். தினமலர் தான் என்னை கவிஞனாக வளர்த்துவிட்டது. தமிழும், தர்மமும் எப்போதும் கை கோர்த்து நிற்கும். அதை நாம் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவில், தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஐந்தாங்கல், பரமபதம் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் விளையாடும் வண்ணம் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.அத்துடன், கைவினை பொருட்கள், தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'டி - சர்ட்ஸ்' மற்றும் 'கூஞ்ச்' தொண்டு நிறுவனம் சார்பில், பழைய துணிகளில் தயாரித்த பொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை