தென்மண்டல நீச்சல் போட்டி தமிழக வீரர்களுக்கு அழைப்பு
சென்னை: தென் மண்டல நீச்சல் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில், டிச., 27ல் துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர் - வீராங்கனையரை தேர்வு செய்வதற்கான போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில், இம்மாதம் 21ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. நீச்சல், வாட்டர்போலோ மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளுக்கான வீரர் - வீராங்கனையர் தேர்வு செய்யப்படுகின்றனர். போட்டியில் பங்கேற்க விரும்பும் 'கிளப்'புகள் www.tnsaa.in/club என்ற இணைய தளத்தில் ஆன்லைன் வாயிலாக, இன்று முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனிநபராக பங்கேற்க விரும்புவோர், tnsaa.in என்ற மின்னஞ்சல் முக வரியில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க, 13ம் தேதி கடைசி நாளாகும் என, மாநில நீச்சல் சங்கம் தெரிவித்து உள்ளது.