உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை

தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை

சென்னை: தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி, 7 புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. ஒடிஷா மாநில தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சங்கம் சார்பில், தேசிய அளவில் நடந்த 40வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடந்தது. இதில், தமிழக அணி, 35 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் சாதனைப் பட்டியலில், தமிழக வீரர் - வீராங்கனையர், ஏழு புதிய சாதனைகளை படைத்துள்ளனர். பிரிவு சாதனையாளர் போட்டி சாதனை யு - 14 ஆர்த்தி ட்ரையத்லான் 3,147 புள்ளிகள் யு - 16 தன்யா நீளம் தாண்டுதல் 4.23 மீட்டர் யு - 16 அபிநந்த் நீளம் தாண்டுதல் 4.94 மீட்டர் - - 60 மீட்டர் ஓட்டம் 6.95 நொடி யு - 20 கார்த்திகா போல் வால்ட் 3.80 மீட்டர் ஆண்கள் 400 மீட்டர் ரிலே யுவின் ஆனந்தன், ஜெப்ரி வெட்நியூலின், சரண், விக்னேஷ் 3.10.64 நிமிடம் மகளிர் 400 மீட்டர் ரிலே தியா, தீஷிகா, கனிஷ்கா, பெரியசாமி 3.43.87 நிமிடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி