மேலும் செய்திகள்
தமிழ் படைப்பாளர் சங்கத்தில் இருபெரும் விழா
29-Aug-2025
சென்னை,: ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷனின் ஆண்டு பொதுக்குழு மற்றும் தேர்தல் கூட்டம், எழும்பூர் உலக பல்கலை சேவா மையத்தில், நேற்று நடந்தது. தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்த இக் கூட்டத்தில், துணைத் தலைவர் சரவணன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் ராஜசேகர் ஆண்டு அறிக்கையை வாசித்தனர். மேலும், 2025 - 28ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில், மாநில தலைவராக செல்லமுத்து, செயலராக கோவிந்தராஜ், துணை தலைவர்களாக சரவணன், பிரேம்நாத், பொருளாளராக ராஜசேகர் ஆகியோர், போட்டியின்றி தேர்வாகினர். இணை செயலராக மதுநிதா, கண்மணி, மணிகண்டன், நிர்வாக குழு உறுப்பினராக குமரகுரு, பாலமுருகன், பிரனேஷ், வசந்தகுமார் ஆகியோர் தேர்வாகினர். கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பெர்னாண்டஸ், புதுச்சேரி மாநில ரோல்பால் சங்க செயலர் முத்துகுமரன், தென்னிந்திய ரோல்பால் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தலைமை தேர்தல் அலுவலரான, சர்வ தேச ரோல்பால் கூட்டமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் டேவிட் ஆகியோர், இத்தேர்தலை நடத்தினர்.
29-Aug-2025