உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 21ல் துவங்குகிறது தமிழ்நாடு பயண சந்தை

வரும் 21ல் துவங்குகிறது தமிழ்நாடு பயண சந்தை

சென்னை,தமிழக சுற்றுலாத் துறை சார்பில், வெளி மாநில முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வரும் 21ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, 'தமிழ்நாடு பயண சந்தை' எனும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.இது குறித்து, சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை:சுற்றுலாத் துறை சார்பில், முதல் முறையாக 'தமிழ்நாடு பயண சந்தை' எனும் நிகழ்ச்சி, வரும், 21 முதல் 23ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளது.இச்சந்தையில், சுற்றுலாத் துறை சார்ந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக, தமிழகத்தின் வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா வாய்ப்பு தெரிவிக்கப்படும். மாநிலத்தின் சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்ப்பது, இந்நிகழ்வின் நோக்கம்.பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த, பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், விருந்தோம்பல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் முனைவோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை