தென் மண்டல வாலிபால் தமிழக பல்கலைகள் அபாரம்
சென்னை:இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜேப்பியார் பல்கலை இணைந்து, தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலையில் நடக்கிறது.இதில், தென்மாநில அளவில் உள்ள, 78 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த ஆட்டங்களில், தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலை 25 - 1, 25 - 4, 25 - 0 என்ற கணக்கில் ராயசீமா பல்கலையையும், அண்ணா பல்கலை 25 - 7, 25 - 3, 25 - 8 என்ற கணக்கில் தெலுங்கானா பல்கலையையும் வீழ்த்தின.பாரதியார் பல்கலை 25 - 2, 25 - 6, 25 - 5 என்ற கணக்கில், கோனேரு லக்சுமய்யா பல்கலையையும், அழகப்பா பல்கலை 25 - 17, 25 - 15, 25 - 12 என்ற கணக்கில், தும்கூர் பல்கலையையும் தோற்கடித்தன.வேல்ஸ் பல்கலை 25 - 12, 25 - 7, 25 - 9 என்ற கணக்கில், கண்ணுார் பல்கலையை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.