உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து குழுமத்தில் தமிழ் வாரவிழா

போக்குவரத்து குழுமத்தில் தமிழ் வாரவிழா

சென்னை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில், தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்., 29 முதல் மே 5 வரை, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, போக்குவரத்து குழுமமான 'கும்டா'வில், தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது.இதற்காக, பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட அறிவியல் தமிழ் எழுத்து போட்டிகளில், 32 பணியாளர்கள் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஜெயகுமார் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை