மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
25-Jun-2025
அடையாறு, அடையாறில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநில வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.அடையாறு எல்.பி., சாலையில், நேற்று அதிகாலை, ரோந்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அவரிடம் விசாரித்ததில், அவர் ஒடிசா மாநிலம், கஞ்சம் பகுதியை சேர்ந்த போலாசங்கர், 21, என, தெரிந்தது.இவர், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
25-Jun-2025