உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீர் பாட்டிலால் வாலிபர் குத்தி கொலை: போதை நண்பர் வெறி

பீர் பாட்டிலால் வாலிபர் குத்தி கொலை: போதை நண்பர் வெறி

திருவேற்காடு: கள்ளச்சந்தையில் மது வாங்கி குடிக்கும்போது, நண்பர்களுக்குள் போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். திருவேற்காடு, கோலடி, செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30; கூலித்தொழிலாளி. அவரது நண்பர் கருணாகரன், 27. இருவரும், நேற்று காலை கோலடியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்த சென்ற போது, கடை பூட்டப்பட்டிருந்தது. இதனால், மதுக்கூடத்தில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மது பானத்தை வாங்கி குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கருணாகரன், மது பாட்டிலை உடைத்து விக்னேஷின் கழுத்தில் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விக்னேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. திருவேற்காடு போலீசார் கருணாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி