ரூ.4 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
சென்னை, ஆக்கிரமிப்பில் இருந்த, நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.சென்னை தங்கசாலை, அடிப்படை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 805 சதுர அடி கோவில் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சத்தியநாதன் என்பவர் ஆக்கிரமித்து, டிபன் சென்டர் நடத்தி வந்தார்.இது தொடர்பாக, கோவில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, சென்னை முதலாவது மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டார்.இதையடுத்து, நேற்று காலை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உதவி கமிஷனரும், அடிப்படை பிரசன்ன விநாயகர் கோவில் தக்காருமான நற்சோணை தலைமையிலான ஊழியர்கள், ஆக்கிரமிப்பு கட்டட பகுதியை பூட்டி, 'சீல்' வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் என, கோவில் அதிகாரிகள் கூறினர்.