உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருட்டு

திருவொற்றியூர்:திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் - ராமநாதபுரம் பகுதியில், நர்த்தன விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ஜெயராஜ், 57.இவர், நேற்று காலை வழக்கம்போல கோவில் நடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர். மூன்று மாதங்களாக உண்டியல் திறக்கப்படாததால், 10,000 ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ