ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் ரூ.95 கோடியில் புனரமைக்க டெண்டர்
சென்னை, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய் புனரமைக்கும் பணி, 95 கோடி ரூபாயில் மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு, நீர்வழி கால்வாய்கள் முறையாக பராமரிக்கபடாததே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்து, 10.80 கி.மீ., நீளமுள்ள ஓட்டேரி கால்வாய், 6.70 கி.மீ., நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாய் மாநகராட்சி வசம் அரசு ஒப்படைத்தது.அதன்பின், நீர்நிலை வல்லுனர் குழுவை நியமித்து, புனரமைப்பு குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.அதன்படி, ஓட்டேரி நல்லா புனரமைப்பு பணி, 65 கோடி ரூபாயிலும், விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய் புனரமைப்பு பணி, 30 கோடி ரூபாய் என, 95 கோடி ரூபாயில் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.கால்வாய் சீரமைப்பு பணிகள் விரைந்து துவங்கி, வடகிழக்கு பருவமழைக்கு முன், துார்வாரும் பணிகள் முடிவடையும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.