உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடிக்கடி உள்வாங்கும் சாலை சீரமைக்க வாரியம் மும்முரம்

அடிக்கடி உள்வாங்கும் சாலை சீரமைக்க வாரியம் மும்முரம்

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டில், கடம்பன் தெரு உள்ளது. இத்தெருவில் மாநகராட்சி சிறுவர் பூங்கா, கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.இச்சாலையில், சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணி முடிந்த பின், தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஆக., மாதம் இச்சாலை உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்யப்பட்டது. அதே சாலையில், கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலைய வாசலில், கடந்த 16ம் தேதி, 10 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் விழுந்தது.குடிநீர் வாரியத்தினர், பள்ளத்தில் மண் கொட்டி சீரமைத்தனர். இதையடுத்து தொடர்ந்து பள்ளங்கள் விழுவதால், பகுதியினர் அச்சப்படுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து ஆய்வில், குடிநீர் வாரியத்தினர் இறங்கினர். சம்பந்தப்பட்ட குழாயில் 'ஜெட்ராடிங்' இயந்திரம் வாயிலாக அழுத்தம் கொடுத்தனர்.அதில், கடம்பன் தெரு மற்றும் திருமுருகன் தெரு சந்திப்புடன் கழிவுநீர் நின்றது தெரிந்தது. அதை தாண்டி செல்லாததால், அந்த இடத்தில் பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர்.இதையடுத்து, கடம்பன் தெரு மற்றும் திருமுருகன் தெரு சந்திப்பில், சாலையின் கீழ் 16 அடி ஆழத்தில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க, பள்ளம் தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கழிவுநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் குழாயில் உள்ள பழுதை கண்டறிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. குழாயில் பெரிய பாதிப்பு இருந்தால், புது குழாய் அமைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ