உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொரட்டூர் ஏரி கழிவு நீர் கலப்பு சோதனை செய்கிறது வாரியம் தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

கொரட்டூர் ஏரி கழிவு நீர் கலப்பு சோதனை செய்கிறது வாரியம் தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

அம்பத்துார், -கொரட்டூர் ஏரியில், கழிவு நீர் கலக்கும் பகுதியில் தேங்கி இருந்த நீரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆய்வுக்காக கொண்டு சென்றனர். கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழை நீர் வடிகால் வாயிலாக கொரட்டூர் ஏரிக்குள் தொடர்ந்து கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால், கொரட்டூர் ஏரியில் ஆகாய தாமரை படர்ந்து, ஏரி பாழாகி வருகிறது. இது குறித்து புகைப்படத்துடன் கூடிய சிறப்பு செய்தி, கடந்த ஜூலை 17ம் தேதி, நம் 'தினமலர்' நாளிதழில் வெளியானது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை, தமிழக அரசு பின்பற்றவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில், தமிழக மாசுகட்டுபாட்டு வாரியத்தைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர் என இருவர், நேற்று காலை கொரட்டூர் ஏரிக்கு சென்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், கொரட்டூர் ஏரிக்குள் கழிவு நீர் கலக்கும் பகுதியில் நீரை எடுத்து ஆய்வு செய்ய வலியுறுத்தினர். அதன்படி, கொரட்டூர், ஒண்டிவீரன் கோவில் அருகே உள்ள, மதகு பகுதியில் தேங்கியிருந்த கழிவு நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர், சோதனைக்காக எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ