உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேட்டரி திருடிய  சிறுவன் சிக்கினான்

பேட்டரி திருடிய  சிறுவன் சிக்கினான்

புளியந்தோப்பு:பட்டாளம், கே.எம் கார்டன் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 43. இவர், புளியந்தோப்பில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சைட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி, குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 'இன்வெர்டர் பேட்டரி'கள் திருடு போயின. 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மூன்று சிறுவர்கள் குடியிருப்பில் புகுந்து பேட்டரிகள் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், தலைமறைவாக இருந்த வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்து, பேட்டரிகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே கிரிதரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ