உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குண்டும் குழியுமான ஆற்காடு சாலை

குண்டும் குழியுமான ஆற்காடு சாலை

வளசரவாக்கம், சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை உள்ளது. இது, போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது.கோடம்பாக்கம் - போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி நெரிசல் ஏற்படுவதுடன், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது.நேற்று முன்தினம் பெய்த மழையில் இச்சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே, சாலையை சீர் செய்து, போக்குவரத்திற்கு ஏதுவாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ