பெருமாள் கோவிலை கைப்பற்றியது அறநிலைய துறை
பெருங்களத்துார் : நீதிமன்றம் உத்தரவுப்படி, பீர்க்கன்காரணை கிராமத்தில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலை, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று கையகப் படுத்தினர். தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை கிராமத்தில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை நிர்வகிப்பதில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இக்கோவிலை கையகப்படுத்த, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று, இக்கோவிலை கையகப்படுத்தினர். இக்கோவில் தக்காராக, தாம்பரம் சரக ஆய்வாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.