மேலும் செய்திகள்
விரைவு ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
01-Aug-2025
திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே, கடந்த 21ம் தேதி வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார் என்று ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருமுல்லைவாயில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணி, 33 என்பது தெரிய வந்துள்ளது. இறந்த மணிக்கு, யோக பிரியா, 28 என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
வாகனம் மோதி
ஒருவர் பலி
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மோரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 40 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
01-Aug-2025