உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.ஐ., மீதான ஈர்ப்பு எதிர்காலத்தில் மாயமாகும்: ஓவியர் ஜெயராஜ்

ஏ.ஐ., மீதான ஈர்ப்பு எதிர்காலத்தில் மாயமாகும்: ஓவியர் ஜெயராஜ்

சென்னை:மயிலாப்பூரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ''ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மீதான ஈர்ப்பு, எதிர்காலத்தில் காணாமல் போய்விடும்,'' என, ஓவியர் ஜெயராஜ் பேசினார். 'பேனாக்கள் பேரவை' சார்பில், மயிலை ஸ்ரீ கற்பகவள்ளி வித்யாலயாவில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, ஓவியர் ஜெயராஜ் மற்றும் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஓவியர் ஜெயராஜ் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவால், ஒருபோதும் ஓவிய கலையை மாற்றி அமைக்க முடியாது. அது வெறும் மின்னணு மட்டுமே. தற்போது மக்களிடையே ஈர்ப்பு இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஈர்ப்பு காணாமல் போய்விடும்,'' என்றார். எழுத்தாளர் ஆர்னிகா நாசர் பேசியதாவது: 'தினமலர்' நாளிதழின் வாரமலர் இதழ், எழுத்து உலகில் பல எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது. நான் எழுதிய விஞ்ஞான கதைகள், அந்த காலத்தில் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது. நாவலாசிரியர் சுஜாதாவின் யதார்த்த விஞ்ஞான கதைகளோடு, அவற்றை ஒப்பிட முடியாது. பொதுவாக, எழுத்தாளர்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ஒவ்வொரு எழுத்தாளரும், வெவ்வேறு தனித்தன்மை மற்றும் சிந்தனை உடையவர்கள். அதனால் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், 'இந்தியன் ப்ரண்ட் லைன்ரஸ்' அறக்கட்டளை சார்பில், ஏழை பெண்கள் இருவருக்கு, தையல் இயந்திரம் வழங்கினார். மேலும், ஆசிரியை அகிலா ஜ்வாலா மற்றும் சிவகாமசுந்தரி நாகமணி ஆகியோர், ஏழை மாணவியர் இருவரின் கல்விக்காக, தலா 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி