சிறுமி கர்ப்பம் தாய்மாமன் பிடிபட்டார்
நொளம்பூர்: திருமங்கலம் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், 14 வயது சிறுமி, வயிறு வலிப்பதாக அவரது தாயிடம் கூறியுள்ளார்.சிறுமியின் தாய், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனையில், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.விசாரணையில், கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் சிறுமி வீட்டில் இருந்தபோது, சிறுமியின் தாய்மாமன் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதும், இதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரிந்தது.மகளிர் போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிறுமியின் தாய்மாமனை போக்சோ வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.