உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரத்திய நாயை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்

துரத்திய நாயை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 55; இவர், சிப்பிப்பாறை இன நாயை வளர்த்து வந்தார். நேற்று காலை, அவரது நாயுடன் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேட்டைக்காரர்களை அந்த நாய் துரத்தியது. இதனால், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஷாகோட், 60, என்ற வேட்டைக்காரர், அச்சம் அடைந்து நாட்டு துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசில் டில்லிபாபு புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ