உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுனர் கை எலும்பை முறித்தவர் கைது

ஆட்டோ ஓட்டுனர் கை எலும்பை முறித்தவர் கைது

சென்னை:கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுனரின் கை எலும்பை முறித்த பயணியை, போலீசார் கைது செய்தனர்.வியாசர்பாடி, பாரதி நகர் பிரதான தெருவைச் சேர்ந்தவர் சையது ஜபீர், 42; ரேபிடோ ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, 11:00 மணியளவில் அமைந்தகரையில் இருந்து பயணியை ஏற்றிக்கொண்டு, வேப்பேரி நோக்கி சென்றார். அப்போது, நண்பரை சந்திக்க வேண்டும் என, கீழ்ப்பாக்கம் பர்ணபி சாலைக்கு ஆட்டோ ஓட்டுரை அழைத்துச் சென்றுள்ளார். பின் வேப்பேரி வந்த உடன், கால்நடை மருத்துவமனை அருகே இறக்கிவிட கூறியுள்ளார். அங்கு சென்றதும், 190 ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக, 50 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுனரை பிடித்து இழுத்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது. பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டுனரின் கை எலும்பை முறித்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த இப்ராஹிமை, 51 கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை