உறவினர் வீட்டில் திருடியவர் கைது
சென்னை, செப். 28-மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தங்கதுரை, 62. இவர், விநாயகர் சதுர்த்தியன்று, பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது, 80 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.மயிலாப்பூர் போலீசாரின் விசாரணையில், தங்கதுரையின் அண்ணன் மகன் அஜித் மற்றும் அவரது மனைவி தீபிகா ஆகியோர், அவ்வப்போது வீட்டில் தங்கிச்செல்வது வழக்கம். அப்போது, தீபிகாவும், அவரது தாய் பிரேமாவும் நகைகளை திருடியது தெரியவந்தது. பிரேமா நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து, 75 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.