மேலும் செய்திகள்
விதான் சவுதாவில் 21ல் யோகா தினம்
19-Jun-2025
சென்னை, சென்னையில் தாவூதி போராக் முஸ்லிம் சமூகம் நடத்தும், 'மொஹரம் சபை' நாளை துவங்குகிறது. அச்சமூகத்தின் 53வது தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்கிறார்.முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான மொஹரம் மாதம் இன்று பிறக்கிறது. மொஹரம் மாதத்தின் இரண்டாம் நாளான நாளை முதல் ஒன்பது நாட்களுக்கு, சென்னையில் ஆண்டுதோறும், 'ஆஷாரா முபாரகா' எனப்படும் மொஹரம் சபை நடக்கும்.இந்த ஆண்டு நடக்கும், 'மொஹரம் சபை' நிகழ்ச்சியில் பங்கேற்க, உலகளாவிய தாவூதி போராக் முஸ்லிம் சமூக தலைவர் சையத்னா முபாதல் சைபுதீன் சென்னை வந்துள்ளார்.சென்னை பாரிமுனை மூர் தெருவில் உள்ள, தாவூதி போராக் முஸ்லிம் சமூக மசூதியில், அவருக்கு முஸ்லிம் சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர். நேற்று, அவரை சந்திக்க நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.மொஹரம் சைபை, நாளை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை, மூர் தெரு மசூதியில் நடக்கிறது. இதில், 12,000 பேர் கலந்து கொள்கின்றனர்.ஒன்பது நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள பின்னி திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர், ராயபுரம் செட்டி தோட்டம், புர்ஹானி மசூதி உட்பட ஒன்பது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
19-Jun-2025