உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உங்க வீட்டு பேனா கூட எழுதல வீடு புகுந்த திருடன் வேதனை

உங்க வீட்டு பேனா கூட எழுதல வீடு புகுந்த திருடன் வேதனை

புழல்: புழல், சுப்பிரமணிய நகரைச் சேர்ந்தவர் ராதா, 56. இவரது மகன் அமெரிக்காவில் உள்ளார். வீட்டில் இவர் மட்டும் வசிக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தீபாவளி பண்டிகைக்காக, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வீட்டின் பூஜை அறையில் இருந்த நான்கு வெள்ளி தட்டுகள் மாயமாகி இருந்தன. மேலும், வீட்டின் சுவரில், 'இந்த வீட்டுல ஒண்ணுமே இல்ல. நான்கு வெள்ளி பொருட்கள் மட்டும் தான் இருந்தன. இவற்றை தவிர வேறு இல்லை; தெரியாம வந்துட்டேன், மன்னிச்சுடுங்க; அம்மா, அப்பா, அய்யா பேனாவும் சரியா எழுதல' என, பென்சிலால் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை