கடலில் மூழ்கி நபர் மாயம்
சென்னை, குரோம்பேட்டை, ராதா நகரைச் சேர்ந்தவர் திலக், 52. இவர் நேற்று காலை, பால விஜயன் என்ற நண்பருடன், மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.எழிலகம் எதிரே கடலில் குளித்த போது, பெரிய அலையில் திலக் இழுத்துச் செல்லப்பட்டார்.உடனே பாலவிஜயன், அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி போலீசாரும், கடலோர காவல் படையினருடன் மீனவர்களும் இணைந்து, கடலில் மாயமானவரை தேடி வருகின்றனர்.