உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைதிக்கு கஞ்சா கொடுத்தவர் கைது

கைதிக்கு கஞ்சா கொடுத்தவர் கைது

புழல், மதுரவாயலை சேர்ந்தவர் புருசோத்தமன், 23. கடந்தாண்டு நவம்பரில் வழிப்பறி வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, கொரட்டூர் அடுத்த பாடிக்குப்பத்தை சேர்ந்த மகேஷ், 21, என்பவர் நேற்று முன்தினம் சந்தித்தார்.அப்போது, புருசோத்தமனுக்கு கொடுத்த பொருட்களை சிறை போலீசார் சோதித்த போது, குளியல் சோப்பின் நடுவில் 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மகேஷ் மீது புழல் போலீசில் புகார் செய்தனர். அவரை, போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து, சிறை கைதிகளின் அறையில் நடந்த சோதனையில், மேலும், 100 கிராம் கஞ்சா, கழிவறை அருகே மறைத்து வைத்திருந்த இரு மொபைல்போன்களும் சிக்கின. அவற்றை பயன்படுத்திய 11 கைதிகள் மீதும் புழல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை