உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது

சென்னை:சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை, கோபால் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 19. இவர், நேற்று முன்தினம் காலை சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடந்து சென்றார்.அப்போது, மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில், இவரது சட்டை பாக்கெட்டிலிருந்த, 1,800 ரூபாயை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், சிந்தாதிரிப்பேட்டை, என்.என்.காலனி பிரதீப், 27, என்பதும், 'ஏ' பிரிவு ரவுடி என்பதும் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் இவரை கைது செய்து, கத்தி மற்றும் 150 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை