உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி

நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி

திருமங்கலம், :அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டில், திருமங்கலம், 100 அடி சாலை உள்ளது. இங்கு, பாடி மேம்பாலத்தில் இருந்து, திருமங்கலம் நோக்கி செல்லும் பாதையில், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பாதையின் சாலையோரத்தில் பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ