இரவும் தொடர்ந்த போராட்டம்
மறுகுடியமர்வு செய்யப்பட்ட மூலக்கொத்தளம் வாரிய குடியிருப்பில், குடிநீர், மின்சாரம் என, எந்த அடிப்படையும் வசதி இல்லை என, மறுகுடியமர்வு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு வழங்கப்பட்ட வீட்டிற்குள் செல்லாமல் குடியிருப்பு கீழ் தளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்று முதல் மூன்று மாடியில் வீடுகள் ஒதுக்குவதாக கூறி அழைத்து வந்து, ஆறு முதல் 11வது மாடிகளில் வீடுகள் ஒதுக்கியதால் மக்கள் வேதனையில் புலம்பினர்.