உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமரச பேச்சு தோல்வி தொடரும் போராட்டம்

சமரச பேச்சு தோல்வி தொடரும் போராட்டம்

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார் அலமாதி சாலையில், செலிபிரிட்டி பேஷன் என்ற பெயரில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, 560 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.நிர்வாக சிக்கல் காரணமாக நிறுவனத்தை தாம்பரம் மெப்ஸ் பகுதிக்கு இடம் மாற்ற நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.திடீர் இடமாற்றத்திற்கு தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த 9ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த சமரச பேச்சும் தோல்வியில் முடிந்தது.போராட்டத்தை மேலும் வலுப்படுத்தப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை