உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்

பஸ் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்

சென்னை, சென்னை, பிராட்வே - அனகாபுத்துார் இடையே வழித்தடம் எண்: 60 மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து, தேனாம்பேட்டையில் இருந்து நந்தனம் வந்துக் கொண்டிருந்தது. அதில், நந்தனம் கலை கல்லுாரி மாணவர்கள் சிலர், பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர்.இது குறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி பயணியர் இறக்கப்பட்டு, வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள், பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடினர். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.'கல்லுாரி மாணவர்களின் அட்டகாசம் தொடர்கதையாகிவிட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட பயணியர் புலம்பியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ