பஸ் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்
சென்னை, சென்னை, பிராட்வே - அனகாபுத்துார் இடையே வழித்தட எண்: 60 மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து, தேனாம்பேட்டையில் இருந்து நந்தனம் வந்துக் கொண்டிருந்தது. அதில், நந்தனம் கலை கல்லுாரி மாணவர்கள் சிலர், பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர்.இது குறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி பயணியர் இறக்கப்பட்டு, வேறு பேருந்தில் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், துாரத்தில் போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள், பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடினர்.