உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது

 காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது

சென்னை: சென்னை மண்ணடி, தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை, 40 லட்சம் ரூபாயில் உயர்த்தும் பணி நேற்று துவங்கியது. நவீன தொழில்நுட்பம் வாயிலாக, 3 அடிகள் உயர்த்தப்பட உள்ளன. இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். பூங்கா நகரில் தமிழ்நாடு திருக்கோவில் உபயதாரர்கள் சார்பில், அய்யப்ப பக்தர்களுக்காக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கட்டுகளை கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் வாகனம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் பாலாலயம் விழா நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ