உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தவாரி விமரிசை

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தவாரி விமரிசை

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, உற்சவர் பவள வண்ண பெருமாள், அம்ச, சிம்மம், சூரிய பிரபை, நாகம், அனுமந்தம், யானை, குதிரை வாகனம், நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி, மாடவீதியில் உலா வந்தார். பிரதான நிகழ்வான கருடசேவை 13ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 17ம் தேதியும் நடந்தன.இதையடுத்து, நேற்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. முன்னதாக, சக்கரத்தாழ்வாருக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் உள் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா' என, விண்ணதிர முழங்கினர்.மாலையில், அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் உற்சவர் பவள வண்ண பெருமாள், கோவில் கொடிமரம் அருகே எழுந்தருள கொடியிறக்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை