உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்

மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்

அசோக் நகர், சென்னை, அசோக் நகர் 7வது மெயின் அவின்யூவைச் சேர்ந்தவர் திருஞானம், 45. இவர், அப்பகுதியில் 7 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார்.வழக்கம்போல, நேற்று காலை மருந்தகத்தை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.கல்லா பெட்டியில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. அசோக் நகர் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இருவர் கடப்பாரையால் ஷட்டர் பூட்டு உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.மேலும், கடைக்குள் புகுந்து பணம் மற்றும் சாக்லேட்டுகள் திருடும் காட்சியும் பதிவாகி இருந்தன. வழக்கு பதிந்த போலீசார், மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ