உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருட்டு வழக்கு: தம்பதி கைது

திருட்டு வழக்கு: தம்பதி கைது

சென்னை, அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; கட்டட ஒப்பந்ததாரர். இவர், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் 13வது தெருவில் உள்ள சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டித்தர ஒப்பந்தம் செய்து பணிகளை மேற்கொண்டு வந்தார்.கடந்த 13ம் தேதி இரவு, கட்டுமான தொழிலாளர்கள் நான்கு பேரை, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருட்டு கட்டையால் அடித்து ஓடவிட்டனர். சிறிது நேரம் கழித்து, அவர்கள் வந்து பார்த்தபோது, இரண்டு மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், 7,000 ரூபாய் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து வானகரம் போலீசார் விசாரித்தனர். இதில், அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 24, சரஸ்வதி, 24, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் 2,100 ரூபாயை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், கணவன் மனைவி என்பது தெரியவந்தது. ஜெயப்பிரகாஷ் மீது, ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை