உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 கடைகளில் திருட்டு: பூந்தமல்லியில் பீதி

4 கடைகளில் திருட்டு: பூந்தமல்லியில் பீதி

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே அகரமேல் பஜார் பகுதியில் உள்ள காய்கறி, மளிகை கடை என, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை நேற்று காலை உடைத்த மர்ம நபர்கள், 5,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள், 4,000 ரூபாய் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ