மேலும் செய்திகள்
கால்பந்தில் சிட்டி போலீஸ் அணி வெற்றி
30-Apr-2025
சென்னை :ஆடவருக்கான மூன்றாம் டிவிஷன் கால்பந்து போட்டியில், எஸ்.சி., ஸ்டெட் அணி, 2--0 என்ற கோல் கணக்கில் திலக் மோதி அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான மூன்றாவது டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை கண்ணப்பர் திடல் மைதானதில் நடக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில், எஸ்.சி., ஸ்டெட் அணி, திலக் மோதி அணியை எதிர்க்கொண்டது. விறுவிறுப்பான போட்டியில் திலக் மோதி அணியை, 2 - 0 என்ற கோல் கணக்கில், எஸ்.சி., ஸ்டெட் அணி வென்றது. எஸ்.சி., ஸ்டெட் அணி சார்பில் விக்னேஷ்வரன் 48 வது நிமிடத்தில் தன் அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 50வது நிமிடத்தில் கோகுல் பிரசாத் ஒரு கோல் அடித்தார். திலக் மோதி அணிக்குக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
30-Apr-2025