சிறந்த மாணவர்களுக்கு திருக்குறள் பேரவை பரிசு
பல்லாவரம், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மகளிர் முன்னேற்றம், தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி ஆகிய தமிழக அரசின் திட்டங்களை பாராட்டி, குரோம்பேட்டை திருக்குறள் பேரவை மற்றும் பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி ஏற்பாட்டில், மாபெரும் விழா, நேற்று நடத்தப்பட்டது.பல்லாவரத்தில் நடந்த விழாவில், திருக்குறள் பேரவை தலைவர் பாண்டியன், தாம்பரம் இரண்டாவது மண்டலக்குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், 'திருக்குறள் வழி நடக்கும் முதல்வர் ஸ்டாலின் வெற்றிக்கு காரணம் கனிவா, துணிவா' என்ற தலைப்பில், நடுவர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளிகளில் படித்து சிறந்து விளங்கும் மாணவர்கள், அரசு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சிறந்த பள்ளிகள் மற்றும் 1,330 திருக்குறள்களை மனப்பாடம் செய்த மாணவர்களுக்கு, அமைச்சர் அன்பரசன், பரிசு வழங்கினார். விழாவில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.